புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2016

ஜெ.,வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை : அப்பல்லோ விளக்கம்

முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவ்வப்போது அப்பல்லோ அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில்,  11-வது நாளான இன்று மாலை, முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

அந்த அறிக்கையில் மேலும்,  ‘’முதல்வருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பொருத்தமான சிகிச்சை அளிக்கப்படுகிறது.  முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பிலே ஆலோசனை நடத்தினார்.  லண்டன் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   முதல்வர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.

ad

ad