புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2016

முருகேசுசந்திரகுமார் தலைமையில் “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ அங்குரார்ப்பணம்

மக்களின் அரசியல் உரிமைகளையும் அரசியல் அதிகாரத்தையும் எட்டுவதற்காக நாம் ஒன்று கூடிப் புதிய முறையில் உழைப்போம்.
இதே வேளை மக்களுடைய நலன்களை முதன்மைப்படுத்திய சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நாமனைவரும் அப்பணிப்புடன் ஒன்றுப்பட்டு செயற்படுவோம். இதன் மூலம் மக்களுடைய அரசியலில் பாதையிலும் அவர்களுடைய வாழ்க்கையிலும் நம்பிக்கையான புதிய மாற்றங்களை உண்டாக்குவோம். வெற்றியடைந்த மக்களாக எம்மை நாம் மாற்றியமைப்பதற்கு அறிவார்ந்த முறையில் புதிய செயற்பாடுகளையும் போராட்டங்களையும் முன்னெடுப்போம்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.10.2017) கிளிநொச்சியில் “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு“ அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின்போது தனது ஆதரவாளார்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே முருகேசு சந்திரகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்அங்கு மேலும் குறிப்பிடுகையில் இன்றைய உலகில் சூழ்நிலைகளின் தன்மைகளிலிருந்து உருவாக்கப்பட்டதே நவீன தேசியமாகும். அதுவன்றி அது சிலருடைய விருப்பங்களின் மீது கட்டியெழுப்பட்டது அல்ல.
ஒரு தேசிய இனத்தின் மொழி , மதம் , பண்பாடு, மானிடவியல் போன்றவற்றின் அடிப்படையில், ஏனைய இனங்களுக்கும் சமூகங்களுக்குமிடையில் பரஸ்பரம் கௌரமாகவும், சமமாகவும் வாழக் கூடிய சூழல் இதன் மூலம் ஏற்படுத்தப்படும். எனவே இந்தச் சமூக அரசியலை நோக்கிய பயணத்தில் நாம் அனைவரும் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலமே எமது இனத்தின் அடையாளங்களையும் அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொள்கின்ற வேளை இனத்துக்குள்ளே நிலவுகின்ற பாரபட்சங்களையும் நீக்க முடியும்.
அனைத்து மக்களும் சமமானவர்கள் சம உரிமைகளைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவோம். இதுவே எமது இலக்காகும்“ எனக் கேட்டுக்கொண்ட அவர்இ “சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு” எப்பொழுதும் மக்களுக்காக உழைக்கின்றவர்களை அரவணைத்துக்கொண்டுதனது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்லும். இந்த அமைப்பானது முக்கியமாக சமூக நீதிக்காக தன்னுடைய செயற்பாடுகளை முழுஅளவில் மேற்கொள்ளும். இதேவேளை ஆதரவாக அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுப்படும் எனவும் தெரிவித்தார்.
சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுஇ அரசியல் உரிமை தொடர்பாகவும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றுக்குத் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தைப்பற்றியும் கருத்துரைத்தனர்.

ad

ad