புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2016

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அன்டோனியோ கட்டெரெஸ் நாளை முறைப்படி தேர்வு: இந்தியா வரவேற்பு

UNGA__Antonio
ஐ.நா. சபையின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டு முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் தேர்வு செய்யப்படுவதை இந்தியா
வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஐ.நா.வின் புதிய பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் தேர்ந்தெடுக்கப்படுவதை இந்தியா வரவேற்கிறது.

அவருக்கு எங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தனது பதிவுகளில் சையது அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் அன்டோனியோ குட்டெரெஸ் கைகுலுக்கும் படத்தையும் தனது சுட்டுரைப் பதிவுடன் சையது அக்பருதீன் இணைத்திருந்தார்.

குட்டெரெஸ் கடந்த ஜூலை மாதம் தில்லி வந்திருந்தபோது சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

ad

ad