புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதை மாற்றுமாறு வலியுறுத்தியும், கிரேக்கத்தில்
உள்ள அகதிகளுக்கும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்தும் எதென்ஸ் நகரில் நேற்று (வியாழக் கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை இடதுசாரி இனவெறி அமைப்பு மற்றும் அமைதி குழுக்கள் என்பவை முன்னெடுத்திருந்தன.
எதென்ஸில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் மற்றும் அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக சென்றனர்.
ஐரோப்பா நோக்கி பயணிக்கும் குடியேற்றவாசிகளை துருக்கியில் தடுத்து வைப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் – துருக்கிக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராகவும் அவர்கள் கோஷமெழுப்பினர்.
இதேவேளை கிரேக்கத்தில் உள்ள அகதி முகாம்களில் 60 ஆயிரத்திற்கும் குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad