புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரையும் சந்திப்பார் ஜனாதிபதி?

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த பல்கலை மாணவர்களின் பெற்றோரை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி நாளை மறுதினம் (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த விஜயத்தின் ஒரு அங்க மாக உயிரிழந்த மாணவர்களின் இல்லங்களுக்கும் செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக கீரிமலையில்அமைக்கப்பட்டுள்ள வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையிலேயே ஜனாதிபதியின் யாழ். விஜயம் அமையவுள்ளது.

குறித்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad