புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2016

ஸ்டாலின்தான் எனது அரசியல் வாரிசு: கருணாநிதி பேட்டி

Stalin is my political heir, says Karunanidhi in an interview
மு.க.ஸ்டாலின்தான் தனது அரசியல் வாரிசு என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மேலும்,
கழகத்தில் இல்லாத அழகிரியை நினைத்து வருத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விகடன் வார இதழுக்கு கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், இத்தகவலை அவர் கூறியுள்ளார். ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்? என்று எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு, கருணாநிதி கூறியுள்ள பதிலை பாருங்கள்.
ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
ஸ்டாலின் செயல்பாட்டை எப்படிக் கணிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, "தம்பி ஸ்டாலினின் செயல்பாடு, சிறப்பாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது. கட்சியினரையும் கட்சியையும் அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கு, மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக உள்ளது." என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க-வில் மு.க.அழகிரி இல்லாததை, ஓர் இழப்பாக நீங்கள் கருதுகிறீர்களா? என்ற ஒரு கேள்விக்கு, "இருப்பதை எண்ணி மகிழ்ந்து, மேலும் மேலும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வேண்டுமே தவிர, கழகத்தில் தற்போது இல்லாத யாரையும் நினைத்து, ஏங்கி நிற்பது பயணத்துக்குத் தடையாகிவிடும்." இவ்வாறு கருணாநிதி பதிலளித்துள்ளார்.

ad

ad