புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2016

மகிந்தவிற்கு ராஜயோகம் புத்தாண்டுக்கு பின்னர் அரசமைப்போம்-கூட்டு எதிர்க்கட்சி சபதம்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் தமது அரசாங்கம் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

களுத்துறை, புளத்தசிங்கள பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

ஜனாதிபதிக்கு  நிறைவேற்று அதிகாரம் உள்ளபோதிலும் பிரதமர் உட்பட அமைச்சரவையே தற்போது அரசாங்கத்தை முன்னெ டுத்து வருகிறது. 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதிலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்க ப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கூறியது போல், ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர ஏனைய அனைத்தையும் செய்யக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதியானால் இந்த அரசாங்கத்தை வீட்டுக்க அனுப்ப முடியும்.இந்த மாதம் 15 ஆம் திகதிக்கு பிறகு மகிந்த ராஜபக்ஸவிற்கு அரசாளும் ராஜயோகம் வருகிறது.நாங்கள் எங்களது வேலைத்திட்டங்களை 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவிருந்தோம். எனினும் சுப நேரம் இருக்கவில்லை. இதுதான் உண்மையான கதை.

மகிந்தவுக்கு அரசாளும் யோகம் ஆரம்பித்துள்ளதால், நாங்கள் எங்கள் வேலைகளை ஆரம்பித்து அடுத்த தமிழ், சிங்கள புத்தாண்டு க்கு முன்னர் அரசாங்கத்தை அமைப்போம்.மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருப்பது எமக்கு எந்த பிரச்சி னையும் இல்லை.

நாங்கள் 51 பேரும் அதற்கு இணங்குகிறோம். இதனை எவரும் எதிர்க்கவில்லை. எனினும் நாட்டின் பிரதமர் பதவியை மகிந்த ராஜ பக்சவுக்கு வழங்க வேண்டும். அப்போது முழுமையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முடியும்.

நாடாளுமன்றத்தில் தலைகளை மாற்றுவது பெரிய காரியமல்ல என்று மகிந்த ராஜபக்ஸ இதனையே கூறியிருந்தார் என்றும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

ad

ad