புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2016

ஓய்வூதியம் வழங்க கோரி ஊனமுற்ற இராணுவ வீரர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

தமக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரி, சேவையில் இருந்து இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் தொடர்ச்சி யாக போராடி வந்த நிலையில், தற்போது சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். 

ஓய்வூதியம் பெற நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையான 12 வருடங்களை பூர்த்தி செய்யாது இடைவிலகிய ஊனமுற்ற இராணுவ வீரர்கள் கடந்த 31ஆம் திகதி முதல் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு வழங்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என, "இராணுவ வீரர்க ளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு" குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று பகல் முதல் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அமை ப்பின் தலைவர் பீ.வசந்த சுட்டிக்காட்டியுள்ளார். 

ad

ad