புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2016

சென்னையில் கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கொலை

சென்னையில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தியாகராயநகர், அபிபுல்லா சாலை, வித்யோதயா பிரதான சாலை சந்திப்பில் பங்களா வீட்டில் வசித்து வந்தவர் சாந்தி (வயது 66). பட்டதாரி பெண்ணான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவரது தந்தை பிராட்நாத் கோடக் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும், தாயார் லட்சுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டனர்.
இந்நிலையில், சாந்தி தனியாக தனது பங்களா வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது தாய்மாமன் சோமசுந்தரம் மற்றும் அவரது மகன் ரமேஷ் என்பவரும் தான் சாந்திக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை ரமேஷ் சாந்திக்கு போன் செய்துள்ளார். ஆனால் சாந்தி போனை எடுக்கவில்லை, அதனால் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், வீட்டில் வீட்டின் படுக்கை அறையில் கொடூரமான முரையில் சாந்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த ரமேஷ் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, ரமேஷ் உடனடியாக தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கைரேகை நிபுணர்களுடன் கொலை நடந்த அறையில் பதிவாகியிருந்த கொலையாளிகளின் கைரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் உயர் அதிகாரி கூறியதாவது,
கொலை செய்யப்பட்ட பெண் சாந்தி நீண்டகாலமாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவரது தந்தையின் பென்ஷன் பணத்தில் அவர் வாழ்க்கை நடத்தியுள்ளார்.
அவர் வசிக்கும் வீடு 2 தளங்களைக் கொண்டது. 2 கிரவுண்ட் நிலப்பரப்பில் அந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் மதிப்பே ரூ.20 கோடி இருக்கலாம்.
அதுதவிர இன்னொரு அடுக்குமாடி குடியிருப்பு வீடும், சென்னை பெருங்குடியில் நிலமும் சாந்திக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
வாரிசுகள் இல்லாதநிலையில் சாந்தியின் சொத்துகளை அபகரிப்பதற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.
மேலும், வீட்டின் எதிர்பக்கம் கண்காணிப்பு கமெரா உள்ளது. அந்த கமெராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறோம்.
சாந்தியின் வீட்டில் ஹெல்மெட் ஒன்றும் கிடந்தது. அந்த ஹெல்மெட் கொலையாளியின் ஹெல்மெட்டா? என்றும் விசாரணை நடக்கிறது.
மேலும்,கொலை நடந்த வீட்டின் முன்பு சாக்கடை குழாய் போடுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் வேலைபார்த்த ஊழியர்களிடம் விசாரித்து வருகிறோம்.
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ad

ad