புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – -நட்டாசா கிளார்க்-

நிபந்தனை 50 (Article 50) இனை அடுத்த மாதமளவில் அமுல்ப்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர் தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் – நட்டாசா கிளார்க்-
நிபந்தனை 50 இனை அடுத்த மாதமளவில் அமுல்படுத்திய பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து  பிரித்தானியாவில் குடிபெயர்ந்தோர்
தங்கியிருப்பதற்கான உரிமையானது தெரேசாமேயினால் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என டவுனிங் தெருச் செய்திகள் அதன் உள்ளார்ந்த கடினங்களைக் கணக்கில் கொள்ளாமல் பரிந்துரைக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குடிபெயர்ந்து பிரித்தானியாவில் தங்கியிருப்பவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தினை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறுவதாக அறிவிக்கப்படப் போகும் நாளிலிருந்து முடிவுக்குக் கொண்டு வருதல் குறித்த அறிக்கையினை வெளியிடுவதற்கு, பிரித்தானியப் பிரதமர் தெரேசாமே தயாராகிக் கொண்டிருப்பதாக இன்றைய காலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தெரேசாமே அடுத்த மாதமளவில் நிபந்தனை 50 இனை அமுலுக்கு வருவதனை அறிவிக்க இருப்பதாக நம்பப்படுகின்றது.  நிபந்தனை 50 அமுலுக்கு வருவதை அறிவித்த பின்னர் பிரித்தானியாவிற்குள் வருபவர்கள், அவர்கள் ஐயோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாட்டினர் என்பதனால் பிரித்தானியில் குடியிருக்க அவர்கள் இயல்பாகக் கொண்டிருந்த உரிமையானது இல்லாமலாக்கப்படுகின்றது எனக் கூறுவதற்குப் பிரித்தானியப் பிரதமர் தயாராகி வருவதாக “த ரெலிகிராவ்” செய்தியிட்டுள்ளது.
வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் திகதியளவில் கால வரையறைக்கான புள்ளி அமையலாம். 2019 ஆம் ஆண்டு வரையில் இந்தத் திகதியை ஒத்திவைக்கும் படி கோரி ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள முக்கிய பிரமுகர்கள் பிரித்தானியப் பிரதமர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றார்கள்.
பிரித்தானியாவுக்குள் வரும் குடிவரவாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக உத்தியோகபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தக் காலவரையறை ஒத்திவைப்பானது, பிரித்தானியாவுக்குள் வரும் குடிவரவாளர்களை சடுதியாக அதிகரித்துவிடுமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.
வாக்கெடுப்பு நடத்தப்பட்ட கடந்த யூன் மாதத்தினை காலவரையறையாகக் கொள்ளலாம் என்ற பரிந்துரைகளையும் அரசாங்கத்திலுள்ள பிரமுகர்கள் கவனத்திலெடுத்து வந்தனர். எனினும் இந்த அணுகுமுறை சட்டத்திற்கு புறம்பானதாகும் என சட்டத்தரணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
டவுனிங் தெருச் செய்திகள், காலவரையறை குறித்த அதன் உள்ளார்ந்த கடினங்களைக் கணக்கில் கொள்ளாமல் இன்று காலை வெளியாகின.  இந்த அறிக்கையானது ஒரு ஊகமே தவிர, இந்தக் காலவரையறை குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என இது குறித்துப் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

ad

ad