புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2017

சுவிட்சர்லாந்தின் தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் மீது பாரிய குற்றச்சாட்டு





சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.
எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக டொச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
அன்பளிப்பாக பணம் வசூலிக்கப்படுவதுடன் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வழக்கமான பணத்தை செலுத்தும் குடும்பத்தின் தம்பதிகள் பணம் செலுத்தியமைக்கான ஆதாரங்களை வைத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த இரண்டு தமிழர்கள் மாதம் தோறும் தமது சம்பளத்தில் 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்தி வருகின்றனர். மொத்தமான இவர்கள் 500 பிராங்குகளை செலுத்துகின்றனர்.
இந்த தேவாலயம் வருடந்தோறும் 3 லட்சத்து 50 ஆயிரம் பிராங்குகளுக்கும் மேற்பட்ட தொகையை அன்பளிப்பாக வசூலித்து வருவதாக தெரியவருகிறது.

ad

ad