புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2017

சட்டப்பேரவையில் நாளை பலப்பரீட்சை - பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி?

ஐந்து உறுப்பினர்கள் பன்னீர் பக்கம் வந்தாலே எடப்பாடிகோவிந்தா .பாராளுமன்ற லை நினைத்து காங்கிரஸ் கூட கை
கொடுக்கலாம்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை மாலை பதவியேற்றது. இதையடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நாம்பிக்கை வாக்கு கோருவதற்காக சட்டப்பேரவை நாளை 18ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது.
சட்டப் பேரவை கூடும்போது, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவார். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில் கிடைக்கும் முடிவின்படி, பேரவைத் தலைவர் அமைச்சரவைக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை அறிவிப்பார். பேரவையில் பெரும்பான்மையை நிருபித்தபின்னரே புதிய அரசு முழுமையாக செயல்படத் தொடங்கும்.
தமிழக சட்டப்பேரவையில் மொத்தம் 234 பேர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற ஜெயலலிதா இறந்துவிட்டதால், மீதமிருக்கிற 233 உறுப்பினர்களில் சபாநாயகர் தவிர்த்து 232 பேர். இவர்களில் பாதிக்கும் மேல் அதாவது குறைந்தபட்சம் 117 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு பதில், சபையில் இருக்கும் உறுப்பினர்களில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என நிரூபித்தால் போதுமானது என கவர்னர் சலுகை வழங்கலாம்.
இதன்படி சட்ப்பேரவையில் 200 உறுப்பினர்கள் இருந்தால் 101 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. 117 பேரின் ஆதரவு தேவையில்லை.
யாருக்கும் பெருலும்பான்மை கிடைக்காவிட்டால் 356 பிரிவின் கீழ் சட்டப்பேரவை கலைக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை 4 முறை ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் கலைஞர் தலைமையிலான ஆட்சி இரு முறையும் (1976 ஜனவரி 31, 1991 ஜனவரி 30), எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1980 பிப்ரவரி 17), ஜானகி தலைமையிலான ஆட்சி ஒரு முறையும் (1988 ஜனவரி 30) கலைக்கப்பட்டது.

ad

ad