புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2017

சுவிட்சர்லாந்தில்அல் கொய்தா, ஐ.எஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள

சுவிட்சர்லாந்தில் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையதாக பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்பு விசாரணையாக டிசினோ மாகாணத்தில் பொலிசார் நடத்திய சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் அல் கொய்தா, ஐ.எஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை குறித்து 100க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மண்டல பொலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ஒருவர் சுவிஸ், துருக்கி இரட்டை குடியுறிமை கொண்டவர் என்றும் மற்றொருவர் துருக்கி நட்டை சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் சுவிட்சர்லாந்தில் உள்ள மக்களை தீவிரவாத அமைப்பில் சேர்க்க உதவும் பணியில் ஈடுபட்டு வந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் நடத்திய அதிரடி சோதனையில் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும், கைது செய்யப்பட்டவர் குறித்த தகவலை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

ad

ad