புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2017

பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை சஞ்ஜீவ் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3.௦ மணியளவில் பருத்தித்துறை வீதி, குஞ்சர் கடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் உழவு இயந்திர சாரதி படு காயமடைந்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad