புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2017

ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் 32 மாவட்டத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதம்

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் சிபிஐ விசாரணை கோரி தமிழகம் முழுவதும் 32 மாவட்டத்தில் 36 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உண்ணாவிரதம் தொடங்கி நடை பெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரத்தப் போராட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் தலைமையில் நடைபெற்று வருகிறது.முன்னாள் அமைச்சர் பென்னையன்,முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.

உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் இடத்தை சுற்றியும் பல்வேறு பேனர்கள் வைக்கப்பட்டு இருக்கிறது.அந்த பேனர்களில் " அம்மா மர்ம மரணம் விரைவாக...சுதந்திரமாக...சட்டப்பூர்வமாக நீதி விசாரணை அமைத்திட" என குறிப்பிட்டுயிருக்கிறார்கள்.

ஓபிஎஸ் மற்றும் முன்னணி தலைவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் "போயஸ் கார்டனில் நடந்தது என்ன?" என்ற கேள்வியுடன் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.ஓபிஎஸ் அணியில் இருக்கும் பேச்சாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலா அணியிணரை அதிக அளவில் கலாய்த்தும்,கிண்டல் செய்கிறார்கள் இத்தகைய பேச்சுகளை கேட்டு கூடியிருக்கும் தொண்டர்கள் ஆரவாரம் செய்கிறார்கள்.

உண்ணாவிரத்திற்கு ஆதரவு தொரிவித்து வரும் தொண்டர்களுக்கு சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஓபிஎஸ் எழுந்து வணக்கம் வைத்து அமர்கிறார்.கட்சி சாராத பல்வேறு அமைப்பினார் நேரடியாக உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்

ad

ad