புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 மார்., 2017

பலாலி வசவிளான் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கிய த.சித்தார்த்தன்

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தங்களுடைய பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி யாழ். பலாலி வசவிளான் மக்கள் தொடர்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலாலி தெற்கு, பலாலி, வசாவிளான், தோலகட்டி ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். சொந்த நிலத்திலிருந்து வெளியேறி 30 வருடங்களாக தனியார் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அந்த மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்குத் தனது பூரண ஆதரவினை வழங்கியதோடு, அவர்களது பிரச்சினையை அரசு மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.

ad

ad