புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2017

கூட்டமைப்பு எம்.பி.கள் மூவர் கையெழுத்திடவில்லை

இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக் கூடாது எனக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திட்டு, ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். 

இந்தக் கடிதத்தில் 8 அல்லது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்டாலும், அதில் மூன்று உறுப்பினர்கள்  கையெழுத்திடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.சிறிநேசன், கோடீஸ்வரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோரே மேற்படி கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று அறிவித்துள்ளதாக, எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ள பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad