புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2017

பலியான பல்கலைக் கழக மாணவர் இருவரின் நினைவாக புதிய பஸ் தரிப்பிடம் - ஈ. சரவணபவன் எம்.பியால் திறப்பு

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் இருவரின் நினைவாக பஸ் தரிப்பிடம்   நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனால்  இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட   மாணவர்கள் இருவரின் நினைவாக காங்கேசன் துறை வீதி சுன்னாகம் பிரதேச சபை பொது நுலகத்திற்கு அருகாமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின்  நிதியில் கட்டப்பட்ட   பஸ் தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 கொல்லப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு, காலம் தாழ்த்தாமல் நீதி வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி வழங்கக்கோரியும், வழங்குவதாக வாக்களித்த நட்ட ஈட்டை விரைவில் வழங்குமாறும்,  கோரிக்கைகள் அடங்கிய மனு  அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு  வழங்குவதற்காக உடுவில் பிரதேச செயலக உப செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 மணியளவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் , வட மாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வலி தெற்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் த.பிரகாஸ், வலி தெற்கு பிரதேச சபை செயலாளர் சுதர்சன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன், உடுவில் மல்வம் றோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் உடுவில் மான்ஸ் கல்லுரி அதிபர்கள் போன்றோர் பங்கு பற்றினர்.

இதனைத் தொடர்ந்து கொடிகாமம், காரை நகர், புத்துர், ஆனைக்கோட்டை, உடுவில் , சுண்ணாகம் போன்ற பகுதியிலிருந்து 100 வறிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ad

ad