புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 30, 2017

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தப் போராட்டத்தின் 100வது நாள் இன்றாகும் (செவ்வாய்க்கிழமை). அதனை முன்னிட்டு வடக்கு- கிழக்கின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்திருக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், பொது மக்களும் இணைந்து கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருகட்டம் வீதி மறிப்புப் போராட்டமாக மாறியது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களுடைய கேள்விகளுக்கு பதில் வழங்கினால் போராட்டத்தை கைவிடத் தயார் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்த நிலையில், ஜனாதிபதியைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் முன்னெடுத்தார்.

ஆனாலும், அது சாத்தியப்படாத நிலையில், பிரதமர் ரணில் விக்ரமமைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் பிரதமருக்கும் இடையில் எதிர்வரும் 07ஆம் திகதி அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.