தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

செவ்வாய், மே 30, 2017

மாணவிகள் வன்புணர்வைக் கண்டித்து மூதூரில் 10 பாடசாலைகளின் மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு

மூதூரில் எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சுமார் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு
தண்டனை வழங்கப்படும்வரை பாடசாலைகளுக்குச் செல்ல மாட்டோம் எனக் கூறி மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
மூதூரில் எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, சுமார் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இன்று பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்வரை பாடசாலைகளுக்குச் செல்ல மாட்டோம் எனக் கூறி மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், மூதூரிலுள்ள சுமார் 10 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை. மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராமையால், பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த வன்புணர்வுச் சம்பவத்தைக் கண்டித்து ஆலங்கேணி மகா வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நாளை வரை மூதூர் நீதpவான் நீதிமன்றத்தால் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.