தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

புதன், மே 31, 2017

தீ விபத்தில் சென்னை சில்கஸ் முகப்பு சுவர் இடிந்து விழுந்தது 14மணி நேர போராட்டம் எந்த வீரரும் உள்ளே செல்ல முடியவில்லை

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 4-வது தளத்தின் முகப்பு சுவர் இடிந்து விழுந்தது. தீ விபத்தால் வெப்பம் தாங்காமல் 15 அடி உயர சுவர் இடிந்து விழுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுவர் இடிந்து விழுந்தவீரர்கள்தா மேற்பட்ட யாருக்கும் பாதிப்பில்லை என தகவல்கள்
தெரிவித்துள்ளன.

தீயை அணைக்கும் பணி தீவிரம்!

சென்னை சில்க்ஸ் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 14 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடையின் சுவர் மற்றும் கண்ணாடிகளை உடைத்தும், 55 டன் எடையுள்ள க்ரோ கிரேன் மூலம் 7 மாடிகளில் துளையிட்டும் தீ அணைக்கப்பட்டு வருகிறது.

தீயணைப்புப் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது,தீயணைப்பு வீரர்களின் சோர்வைக் குறைக்க ஷிப்ட் முறையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது. தீயணைப்பு பணி நிறைவு நேரம் குறித்து எதுவும் கூற இயலாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.