புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 26, 2017

ஊர்காவற்றுறையில் மேலும் 15 பேர் கைது

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, பேருந்து ஒன்றை அந்த பகுதி மக்கள் அடித்து நொருக்கியிருந்தனர். மேலும், கல்வீச்சு தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, பேருந்து ஒன்றை அந்த பகுதி மக்கள் அடித்து நொருக்கியிருந்தனர். மேலும், கல்வீச்சு தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விடயம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.ரியாழின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், இருவரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறித்த இருவரையும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் பெண் ஒருவர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.