புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 31, 2017

பற்றி எரியும் சென்னை சில்க்ஸ்: 15 அடி முகப்புச் சுவர் இடிந்து விழுந்தது..!

இன்று அதிகாலையிலிருந்து பற்றி எரியும் தீயால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 15 அடி முகப்புச்சுவர் இடிந்து விழுந்தது. சென்னை, தி.நகரிலுள்ள 'தி சென்னை சில்க்ஸ்' துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இக்கடையிலிருந்த 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கடுமையாகப் போராடி வரும் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வருகின்றனர். 14 மணிநேரமாகப் போராடி வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள். 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் எந்தப் பகுதியில் முதலில் தீப்பிடித்தது என இதுவரை கண்டறியமுடியவில்லை.

இந்நிலையில், வெப்பம் தாங்காமல் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 15 அடி உயர முகப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், யாருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு பணியும் இதனால் பாதிக்கப்படவில்லை. தொடர்ந்து தீப்பற்றி எரிவதால் கட்டடத்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறி வருகின்றன. கட்டடம் முழுவதும் வலுவிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது.