புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 29, 2017

164 பேரைப் பலியெடுத்த கடும் மழை - மீண்டும் மிரட்டுகிறது!

கடந்தவாரம் கொட்டிய மழையை அடுத்து ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பலியானோர் எண்ணிக்கை 164ஆக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் பல பிரதேசங்களில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிகளவான மழைவீழ்ச்சி மத்திய மலை நாட்டு பிரதேசங்களில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்களா விரிகுடா கடல் பிரதேசங்களின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் காரணமாக சுறாவளியாக மாறும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் வான்பரப்பில் காணப்படும் கருமேகங்கள் காரணமாக மழை மற்றும் காற்றுடனான நிலைமையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டை சுற்றிய கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிட்ட புதிய அறிக்கையின்படி இதுவரை 164 பேர் உயிரிழந்ததுடன் 88 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். 104 பேர் காணாமல் போயுள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு, நுவரெலியா உட்பட நாட்டின் பல பாகங்களில் அடைமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.