கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,,விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக,உதயங்க வீரதுங்க,, பூகோள அரசியல் போட்டியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் சம்பந்தன்! 70

புதன், மே 24, 2017

மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை! ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தற்போதைய செய்தி
...................................................
மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை! ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனையை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மெஸ்ஸீ

உலக புகழ்ப்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக விளையாடி வருகிறார். உலகம் முழுவதும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இதனிடையே கடந்த ஆண்டு, மெஸ்ஸி வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. 4 மில்லியன் யூரோ அளவில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஸ்பெயின் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

மெஸ்ஸி மீதான தடையை விலக்கியது பிஃபா!
அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி நான்கு போட்டிகளில் விளையாட விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. FIFA lifts its ban on Messi
நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டவுடன் தீர்ப்பை எதிர்த்து மெஸ்ஸி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஸ்பெயின் உச்சநீதிமன்றம், தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதனிடையே 2 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற்றிருந்தால் சிறை செல்ல வேண்டாம் என ஸ்பெயினில் சட்டம் இருப்பதால் சிறை செல்வதில் இருந்து தப்பியுள்ளார் மெஸ்ஸி.