தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

புதன், மே 31, 2017

2 மாதங்களுக்குள் மயிலிட்டியை விடுவிப்பதாக கூட்டு அரசு உறுதி மாவை எம்.பி. தெரிவிப்பு

“வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வச­முள்ள மயி­லிட்­டிப் பிர­தே­சம் 2 மாத காலப்­ப­கு­திக்­குள் விடு­விக்­கப் ப­டும் என்று அரசு உறுதி வழங்­கி­யுள்­ளது” இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று யாழ். செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. கூட்­டத்­தில் மீள்­கு­டி­யேற்­றம் விட­யம் குறித்­துப் பேசப்­பட்­டது. இதன்­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராசா மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வலி. வடக்கு மயி­லிட்­டிப் பகு­தி­யைப் பாது­காப்பு தரப்­பி­னர் நீண்­ட­கா­ல­மாக தமது கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கின்­ற­னர். அந்­தப் பிர­தே­சத்தை விடு­விக்­கு­மாறு பல தட­வை­கள் கூட்டு அர­சி­டம் வலி­யு­றுத்­தி­னோம். மயி­லிட்டி பிர­தே­சத்தை இன்­னும் 2 மாத காலப்­ப­கு­திக்­குள் விடு­வித்து பொது­மக்­க­ளி­டம் கைய­ளிப்­ப­தாக அரசு உறுதி வழங்­கி­யுள்­ளது.

அத்­து­டன், பலாலி வானூர்தி நிலை­யத்­தின் விரி­வாக்­கம் தொடர்­பில் 1986ஆம் ஆண்டு கொழும்பு அர­சால் அறி­விக்­கப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலை அடிப்­ப­டை­யாக வைத்து மேல­தி­க­மா­கக் காணி­களை சுவீக­ரிப்­ப­தற்கு தற்­போ­தைய அரசு முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றது. இதற்கு அனு­ம­திக்­க­மாட்­டோம் என்று நாம் அர­சி­டம் உறு­தி­ப­டத் தெரி­வித்­துள்­ளோம்.

1986ஆம் ஆண்டு அர­சால் அறி­விக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் வர்த்­த­மானி அறி­வித்­தலை மீளப் பெற வேண்­டும் என்று கடந்த கால மாவட்ட ஒருக்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தீர்­மா­னம் எடுக்கப்பட் டது –- என்­றார்.