தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

புதன், மே 24, 2017

3–வது முறையாக நரேந்திர மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பதற்காக நேற்று இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்றார். இரவில் தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தார். அவர் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியில் இருந்து பகல் 12 மணிக்குள் பிரதமரை சந்திக்க இருக்கிறார். 

முதல்–அமைச்சரான பிறகு எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திப்பது இது 3–வது முறையாகும். முதல் முறையாக கடந்த பிப்ரவரி 27–ந் தேதியும், 2–வது முறையாக ஏப்ரல் 23–ந் தேதியும் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்