புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 24, 2017

51 நாளாக சிறையில் இருந்த வைகோவுக்கு ஜாமீன்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வைகோ சரண் அடைந்தார். 50 நாட்களுக்கு மேலாக சென்னை புழல் சிறையில் இருந்த அவர், தனக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை 4வது முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.