கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,, 70

செவ்வாய், மே 23, 2017

முல்லைத்தீவு இளைஞன் ஈரானில் கொடூரமாகக் கொலை! - பிரேத பரிசோதனையில் அம்பலம்

முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் இளைஞன், ஈரானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. குறித்த இளைஞனின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு, அலம்பில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய உடற்பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.