தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

புதன், மே 31, 2017

இராணுவத்தினரின் நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க வேண்டும்! - சிவாஜிலிங்கம்

பாடசாலை மாணவர்கள் இராணுவத்தினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் இராணுவத்தினரின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அவர் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் ‘பனங்காட்டுக்குள் புத்திக் கூர்மை எனத் தலைப்பிட்ட நிகழ்வொன்றை படையினர் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியுள்ளனர். மேற்படி நிகழ்விற்கு மாலை 6.00 மணிக்கு பின்னர் பாடசாலை மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இராணுவம் நிகழ்வை நடத்துவதாக இருந்தால் படை முகாமுக்குள் நடத்த வேண்டுமே தவிர அதற்கு பாடசாலை மாணவர்களை அழைக்கக் கூடாது” என எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்