புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 22, 2017

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தமிழ்க் கட்சிகள் ஆலோசனை!

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கும், அதற்காக தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிலங்கை இடதுசாரி கட்சிகளின் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரில்
நேற்று முன்தினம் கூடிய தமிழ் கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. இந்த கூட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன கட்சிகள் கலந்து கொண்டன.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அழுத்தம் கொடுப்பதற்கும், அதற்காக தமிழ், முஸ்லிம், மலையக அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிலங்கை இடதுசாரி கட்சிகளின் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரில் நேற்று முன்தினம் கூடிய தமிழ் கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. இந்த கூட்டத்தில் தமிழரசு கட்சி, புளொட், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகியன கட்சிகள் கலந்து கொண்டனஇந்த சந்திப்பு தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிறீகாந்தா கருத்து தெரிவிக்கையில், ’ரெலோ அமைப்பின் சார்பில் இந்த கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் இலங்கையில் பயங்கரவாதம் இல்லாத நிலையில் அந்த தடை சட்டம் தேவையற்றது. எனவே, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும் நிலையில் நடைமுறையில் உள்ள தடை சட்டத்தை காட்டிலும் மோசமான சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கு முயற்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாத தடை சட்டமே தேவையில்லை. அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என தீர்மானித்துள்ளோம். மேலும் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்குவதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானித்துள்ளோம். இதனடிப்படையில் 2ஆம் கட்டமாக மலையக அரசியல் கட்சிகளுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம். மூன்றாம் கட்டமாக தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு கட்சிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
இந்த கலந்துரையாடலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை முன்னணி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். எனினும் அவர்கள் வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.