திங்கள், மே 22, 2017

அமைச்சரவை மாற்றப்பட்டது

கூட்டரசின் முதலாவது மாற்றம் சற்று முன்னர் நடைபெற்றது.

ஏற்கனவே எதிர்பார்த்தது போன்று நிதி அமைச்சு ரவி கருணா நாயக்கவிடமிருந்து மீளப்பெறப்பட்டு மங்கள சமரவீரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ரவி கருணாநாயக்க அயலுறவுத்துறை அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் அயலுறவுத்துறை அமைச்சராக இருந்த மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.