புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 22, 2017

ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம்?

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக பொது பல சேனா அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு இனவாதச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றது.
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைய நாட்களாக பொது பல சேனா அமைப்பு சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு இனவாதச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றதுகடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 19 இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தவிர, குருணாகல பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்றுகடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 19 இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தவிர, குருணாகல பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்திற்குச் சென்ற இவர்கள் அங்கும் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அமைச்சர் பொலிஸாரில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஞானசார தேரரை நேற்று முந்தினம் இரவு குருணாகலவில் வைத்து கைது செய்வதற்கு பொலிஸார் முயன்றனர்.
ஆனால், அங்கு கூடிய இளைஞர்கள் மற்றும் அவ்வமைச்சார்ந்தோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசியல் தலைவர்களையும், தகாத வார்த்தைகளாலும் திட்டித்தீர்த்தனர். இதேவேளை பொலிஸாருக்கு பிடியாணை இல்லாததால் அன்றைய தினம் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியவில்லை.எனினும் இன்றைய தினம் அவரைக் கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.