புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

ஞாயிறு, மே 21, 2017

ஓ.பி.எஸ். டெபாசிட் வாங்கினால் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார்! விலாசும் சிட்டிங் மந்திரி சீனிவாசன்

உள்ள சசிகலா அணிக்கும் ஓ.பி.எஸ். அணிக்கும் இடையே நடக்க இருந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. இதற்கு சசி அணியை சேர்ந்த அமைச்சர்களான சீனிவாசனும் ஜெயகமாருதான்; காரணம் என ஓ.பி.எஸ். அணியினர் பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் தான் சசி அணியை சேர்ந்த அமைச்சர் சீனிவாசனை திண்டுக்கலில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் சந்தித்தோம்.

நக்கீரன்:- இரண்டு அணிகளுக்கும் இடையே நடக்க இருந்த பேச்சு வார்த்தைக்கு நீங்களும் அமைச்சர் ஜெயக்குமாரும்தான் முட்டுக்கட்டை போட்டு வருவதாக ஓ.பி.எஸ். அணி குற்றம் சாட்டி வருகிறது

சீனிவாசன்:- இணைப்பிற்கு முதலில் ஆதரவு கொடுத்ததே நாங்கள் தான். அதுபோல் தலைமை கழகத்தில் பொது செயலாளர் படம் இருக்க கூடாது என்று கூறினார்கள் அதையும் அகற்றி விட்டோம். துணை பொது செயலாளரான டிடிவியும் கூட இனி நான் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் பங்குகொள்ள மாட்டேன் எனக் கூறி ஒதுங்கி விட்டார். அதன் அடிப்படையில் தான் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அந்த அணியை அழைத்தும் கூட வரவில்லையே தவிர நாங்க ஒன்னும் முட்டுக்கட்டை போடவில்லை. இரு அணிகளும் இணைவதே எனது விருப்பம்.

நக்கிரன்:- சசிகலா பொதுசெயலாளர் இல்லை அதனுடைய பதவி காலியாக உள்ளதால் கட்சி விமுறைகளின்படி தேர்தல் நடத்த வேண்டுமென ஓ.பி.எஸ். கூறிவருகிறாறே?

சீனிவாசன்:- ஓ.பி.எஸ். முதல்வராக இருந்த போதுதான் மதுசூதனன் தலைமையில் பொது குழுவை கூட்டி சின்னம்மாவை பொது செயலாளராக ஆக்கினார்கள் அதன் பின் சின்னம்மா முதல்வராக வரவேண்டுமெனவும் வலிவுறுத்தினார்கள். அப்படி இருக்கும்போது சசிகலா பொது செயலாளர் இல்லை என சொல்வது எந்த விதத்தில் நியாயம். அதோடு தேர்தல் கமிசனில் மனு கொடுத்திருக்கிறார்கள். அதனுடைய தீர்பு வரட்டும், அதுக்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். கழக விதிமுறைகளின்படி கட்சி உறுப்பினர்கள்தான் பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருக்கு அதனுடைய பணிகளையும் செய்து கொண்டுதான் வருகிறோம்.நக்கீரன்:- பொருளாளராக நான்தான் செயல்பட முடியும். அதுனாலதான் வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். அப்படி இருந்தும் கட்சியின் பலகோடி ரூபாயை சீனிவாசன் எடுத்து இருப்பது குற்றமாகும். கட்சி பணத்தை கையாள சீனிவாசனுக்கு உரிமை இல்லை என ஓ.பி.எஸ். கூறி வருகிராறே?

சீனிவாசன்:- பொதுச் செயலாளர் சின்னம்மா தான் என்னை பொருளாளராக நியமித்தார். அதன் அடிப்படையில் வங்களுக்கு தபால் கொடுத்து வரவு செலவு செய்து வருகிறோம். இதில் எந்த தவறும் இல்லையே. இந்த ஓ.பி.எஸ். பொருளாளராக வருவதற்கு முன்பு ஏழு ஆண்டு காலம் பொருளாளராக இருந்தவன். கட்சி நிதியை எப்படி பயன்படுத்த வேண்டுமென எனக்கும் அவருக்கும் தெரியும். கட்சி நிதியையும் யாரும் முறைகேடாக கையாள முடியாது. அப்படி இருக்கும் போது கோடி கணக்கான பணத்தை சீனிவாசன் எடுத்திருக்கிறார் என ஓ.பி.எஸ். கூறியிறுப்பது ஏதோ நான் எடுத்த மாதிரி ஒரு தவறான குற்றசாட்டை பரப்பி வருகிறார்

நக்கீரன்:- ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரனை வேண்டுமென பிரதமர் மோடியிடம் ஓ.பி.எஸ். வலியுறுத்திருக்கிறாறே?

சீனிவாசன்:- ஏற்கனவே அம்மா மரணம் குறித்து கோர்ட்டில் வழக்கு இருக்கு. அதனுடைய தீர்ப்பு எப்படி வருதோ தெரியவில்லை. அதை வைத்து விசாரனை கமிசன் வைத்தாலும் எங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

நக்கீரன்: 122 எம்ஏக்களும் நிர்வாகிகளும் மட்டுமே உங்களிடம் இருக்கிறார்கள். ஆனால் எங்களிடம் தொண்டர்களும் மக்களும் இருக்கிறார்கள் என ஓ.பி.எஸ். கூறி வருகிறாரே?

சீனிவாசன்:- 50 மாவட்டத்தில் 48 மாவட்ட செயலாளர்களும், 38 எம்பிக்களும், 123 எம்எல்ஏக்களுடன் தமிழ் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த கட்சி பொருப்பாளர்களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். அதுபோல் கட்சியில் உள்ள ஒன்றறை கோடி தொண்டர்களும் உறுப்பினர் அட்டையுடன் எங்களிடம்தான் இருக்கிறார்களே தவிர, ஓ.பி.எஸ். பக்கம் இல்லை. அப்படி ஒரு பொய்யை அவரே பரப்பி வருகிறாறே தவிர தொண்டர்களும் மக்களும் எங்களிடம் தான் இருக்கிறார்கள்.

நக்கீரன்:- தேர்தல் வந்தால் உங்கள் அணி டெபாசிட் கூட வாங்க முடியாது என திண்டுக்கல்லில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். கூறியிருக்கிறார்

சீனிவாசன்:- போடி தொகுதியில் போட்டியிட்டுதான் ஓ.பி.எஸ். வெற்றி பெற்றார். அதே போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட்டு டெபாசிட் வாங்கிவிட்டார் என்றால், நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார். எப்ப தேர்தல் வந்தாலும் எப்பொழுதும் போல் அம்மா கட்டி காத்து வந்த எங்க அதிமுக தான் அமோக வெற்றி பெறும்.
நக்கீரன்:- தமிழகத்தில் ஜெ. ஆட்சி நடக்கவில்லை. சசியும், பினாமி ஆட்சியும்தான் நடக்கிறது என ஓ.பி.எஸ். கூறி வருகிறாரே?

சீனிவாசன்:- 123 எம்எல்ஏக்கள் தலைமையில் அம்மா ஆட்சியைதான் முதல்வாரன எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறாரே தவிர, பினாமி ஆட்சியெல்லாம் நடக்கவில்லை. வேண்டுமென்றால் அம்மாவின் பினாமி ஆட்சியை எடப்பாடி நடத்தி வருகிறார் என்று சொல்லலாம்.
நக்கீரன்:- தற்பொழுது சசி குடும்பத்தை சேர்ந்த திவாகர் கட்டுப்பாட்டில்தான் ஆட்சி நடக்கிறது என ஓ.பி.எஸ். அணி குற்றம் சாட்டி வருகிறதே?

சீனிவாசன்:- சின்னம்மா பெங்களுரில் இருக்கிறார். டிடிவி ஒதுங்கிவிட்டார். அவங்க குடும்பத்திலுல்ல திவாகர் அவர் வேலையை பார்த்து வருகிறாரே தவிர, கட்சியும் ஆட்சியும் முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டு வருகிறது.நக்கீரன்:- ஜெ. இருந்தபோது அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எல்லாம் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் இப்ப அந்த கட்டுப்பாடு இல்லையே?

சீனிவாசன்:- அவங்க விருப்பத்தை அவங்க சொல்லுகிறார்கள். அது அவர்களுடைய கருத்தே தவிர, நாம ஒன்னும் சொல்ல முடியாது. ஆனால் கட்சியில் கட்டுப்பாடடெல்லாம் இருக்கிறது.

நக்கீரன்:- தொடர்ந்து இந்த ஆட்சி நான்கு ஆண்டு நீடிக்காது என ஓ.பி.எஸ். அணி குற்றம் சாட்டி வருகிறதே?

சீனிவாசன்:- அம்மா ஆட்சி நான்கு ஆண்டு தொடர்ந்து நீடிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுபோல் அம்மாவில் கோரிக்கைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சென்று மீண்டும் அம்மா ஆட்சியவே மலர வைப்போம்

நக்கீரன்:- நீங்கள் ராசியில்லாத அமைச்சர் என ஓ.பி.எஸ். அணி குற்றம் சாட்டி வருகிறதே?

சீனிவாசன்:- முதல்வர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் நான் பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடத்தினேன். அடுத்த நாள் முதல் தொடர்ந்து மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. ராசி இல்லாதவர் என்றால் மழை பெய்யுமா? எதையாவது சொல்ல வேண்டுமென்பதற்காக அப்படி கூறி வருகிறார்கள்.

-சக்தி