புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 30, 2017

நீதி­மன்ற அவ­ம­திப்­புக் குற்­றச்­சாட்டு ; பட்­ட­தா­ரி­கள் நால்­வ­ரும் பிணை­யில் விடு­விப்பு

நீதி­மன்ற அவ­ம­திப்­புக் குற்­றச்­சாட்டு உள்­ளிட்ட மூன்று குற்­றச்சாட்­டுக்­க ­ளில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த பட்­ட­தா­ரி­கள் நால்­வ­ரை­யும், தலா 2 லட்­சம் ரூபா சரீ­ரப் பிணை­யில் செல்­வ­தற்கு, திரு­கோ­ண­மலை நீதி­வான் மன்ற நீதி­பதி ரத்­நா­யக்கா அனு­ம­தித்­தார்.

பட்­ட­தா­ரி­கள் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன், கே.சயந்­தன், கிரி­சாந்­தன், நுவாண்ட் போபகே ஆகி­யோர் மன்­றில் நேற்று முன்­னி­லை­யா­கி­ னர். பிணை மனு­வைச் சமர்ப்­பித்­தி­ருந்­த­னர்.

அதில், நீதி­வான் மன்­றுக்கு வெளியே நடந்த நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை விசா­ரணை செய்­வ­தற்­கான நியா­யா­திக்­கம் நீதி­வான் மன்­றுக்கு இல்லை என்று வாதா­டி­னர். இது தொடர்­பில் மேல் முறை­ யீட்டு நீதி­மன்­றமே விசா­ரிக்க முடி­யும் என்­றும் குறிப்­பிட்டனர். நீதி­வான் இதனை ஏற்­றுக் கொண்­டார்.

இருப்­பி­னும் பொலி­ஸார் பிணை வழங்­கு­வ­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்­ட­னர். சட்­ட­வி­ரோ­த­மா­கக் கூட்­டம் கூடி­யமை, பொலி­ஸாரை அரச கட­ மை­க­ளைச் செய்ய விடா­மல் தடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக் கள் பட்­ட­தா­ரி­கள் மீது இருக்­கின்­ற­மை­யை­யும் சுட்­டிக்­காட்­டி­னர்.

இதன்­போது பட்­ட­தா­ரி­கள் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­கள், நீதி­மன்­றம் அழைப்­பாணை விடுத்­த­துமே தாமாக மன் றில் அவர்­கள் சர­ண­டைந்­தி­ருந்­தார்­கள். தமது செய­லுக்­கா­கப் பகி­ரங்க மன்­னிப்­புக் கோர­வும் தயா­ராக இருக்­கின்­றார்­கள். இதனை மன்று கவ­னத்­தில் எடுத்து அவர்­க­ளைப் பிணை­யில் விடு­விக்­க­ வேண்­டும் என்று கோரி­னர்.

இத­னை­ய­டுத்து, நால்­வ­ரை­யும் தலா 2 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யி­லான சரீ­ரப் பிணை­யில் நீதி­வான் விடு­தலை செய்­தார்.

பின்­னணி

கிழக்கு மாகாண சபை அமர்வு ஏப்­ரல் 25 ஆம் திகதி நடை­பெற்­ற­போது, பட்­ட­தா­ரி­கள் வேலை கேட்­டுப் போராட்­டம் நடத்­தி­னர். போராட்­டம் நடத்­தக்­கூ­டாது என்ற நீதி­மன்­றத் தடை உத்­த­ர­வைப் பொலி­ஸார் கொடுத்­த­போது, பட்­ட­தா­ரி­கள் அத­னைக் கிழித்து எறிந்­த­னர்.

இது தொடர்­பில் மே மாதம் 23 ஆம் திகதி அவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். பட்­ட­தா­ரி­கள் சார்­பில், திரு­கோ­ண­மலை மாவட்­டச் சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கம் முன்­னி­லை­யாக மறுத்­தி­ருந்­தது. இத­னை­ய­டுத்து, அவர்­கள் சார்­பில் அரச தலை­வர் சட்­டத்­த­ரணி எம்.ஏ.சுமந்­தி­ரன் மன்­றில் முன்­னிலை­
யானார்.