புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 23, 2017

வடக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு - தயார் நிலையில் விசேட அதிரடிப்படை

வடக்கில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பளை பிரதேசத்தில் பொலிஸாரின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதற்கு பொலிஸ் விசேட அதிரடி படையினரை இணைத்து கொள்ளுமாறும், அவசர தடைகள் மற்றும் இரவு ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் வட மாகாணத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
பளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் விசேட ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது