புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 24, 2017

நூதனமாகப் பணம் திருடிய கில்லாடிப் பெண் சிக்கினார்

சாவ­கச்­சேரி பொதுச் சந்­தை­யில் நூத­னத் திருட்­டில் ஈடு­பட்டு வந்த இளம் பெண் நேற்று நகர சபை ஊழி­யர்­க­ளால் பிடிக்­கப்­பட்­டார். இனி­மேல் திருட்­டில் ஈடு­ப­ட­மாட்­டேன் என்று அந்­தப் பெண் வாக்­கு­றுதி வழங்­கி­ய­தால் அவரை விடு­வித்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

‘சந்­தை­யின் கட­லு­ணவு விற்­ப­னைப் பகு­திக்கு வரு­வோ­ரின் கூடை­க­ளில் வைக்­கப்­ப­டும் கைப்­பை­களை இலா­வ­க­மாக எடுத்து அத­னுள் காணப்­ப­டும் பணத்தை அந்­தப் பெண் திருடி வந்­தார். பணத்­தைக் கள­வா­டி­விட்டு கைப்­பையை மீள­வும் உரி­ய­வ­ரின் கூடைக்­குள் அவர் போட்­டு­வி­டு­வார். கட­லு­ண­வைக் கொள்­வ­னவு செய்ய வரும் பெண்­கள் உட்­பட கட­லு­ணவு வியா­பா­ரி­கள் பலர் தமது பணத்தை அவ­ரி­டம் பறி­கொ­டுத்­த­னர்.
கைப்­பை­க­ளில் வைக்­கப்­ப­டும் பணம் திருட்­டுப் போவது தொடர்­பாக சந்­தை­யில் வரி அற­வி­டு­வோ­ரி­டம் பொது­மக்­க­ளால் முறை­யி­டப்­பட்­டது. சந்தை நிர்­வா­கி­கள் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்டு வந்­த­னர். வழ­மை­போல் அந்­தப் பெண் நேற்­றும் சந்­தைக்கு வந்­தார். அவ­ரின் செயற்­பா­டு­களை வரி அற­வி­டும் ஊழி­யர் உன்­னிப்­பாக அவ­தா­னித்­தார். ரிக்­கற் போடு­வது போல ஊழி­யர் அந்­தப் பெண்­ணைப் பின் தொடர்ந்­துள்­ளார்.
கட­லு­ணவு கொள்­வ­னவு செய்ய வந்த பெண் ஒரு­வ­ரின் கூடைக்­குள் காணப்­பட்ட கைப் பையை கில்­லா­டிப் பெண் எடுத்த போது, வரி அற­வி­டு­ப­வர் கையும் மெய்­யு­மாக அவ­ரைப் பிடித்­துள்ளார்.
சம்­ப­வம் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது. கைப்­பை­யைத் தான் எடுக்­க­வில்­லை­யெ­னக் கூறிய பெண், பொலி­ஸார் அங்கு வரவே குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் இனி­மேல் எடுக்­க­மாட்­டேன் என்­றும் தன்னை மன்­னிக்­கு­மா­றும் கில்­லா­டிப் பெண் அழுது குழ­றி­னார். பொலி­ஸார் அழைத்­துச் சென்று சந்­தைப் பக்­கம் இனி­மேல் காணக்­கூ­டாது என எச்­ச­ரிக்கை செய்து விடு­வித்­த­னர்’ என்று சாவ­கச்­சேரி நகர சபை­யி­ன­ரால் தெரி­விக்­கப்­பட்­டது