புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 22, 2017

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் - தடையை மீறி மெரினாவில் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கைதுமுள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் அஞ்சலி செலுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்கத்தின் திருமுருகன்  உள்ளிட்ட பலர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

முன்னதாக நினைவேந்தல் கூட்டம் மெரினா கடற்கரையில் நடத்தக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இதனை மீறி தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மெரினாவில் கூடக் கூடும் என்று தகவல் வெளியானது. இதையடுத்து சென்னை மெரீனாவில் போலீசார் குவிக்கப்பட்டனர். கடற்கரை உள்சாலைக்கு செல்லும் பாதைகளை காவல்துறையினர் மூடினர்.