கட்சி தாவும் உள்ளூராட்சி உறுப்பினர்களின் பதவிகளை கட்சி செயலாளர்கள் பறிக்கலாம்.. தியத்தலாவவில் பேரூந்தில் குண்டு வெடித்து 19 பேர் காயம்! - 11 பேரின் நிலை கவலைக்கிடம் ,,விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிரான குறித்த சிவப்பு அறிக்கைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவே ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக,உதயங்க வீரதுங்க,, பூகோள அரசியல் போட்டியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார் சம்பந்தன்! 70

திங்கள், மே 29, 2017

பெண்ணை முத்தமிட்ட இலங்கைத் தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒருமாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் கடமையாற்றிய இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு ஒருமாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு தடுப்பு முகாமில் கடமையாற்றிய இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

37 வயதான தெய்வீகன் பஞ்சலிங்கம் என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை குறித்த இலங்கையர் முத்தமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அளிக்கும் தரப்பினரே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என நீதிவான் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்ததாக நீதிமன்ற விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த இலங்கையரும் ஓர் புகலிடக் கோரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.