புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 30, 2017

உதயன் மீது தாக்கல் செய்த வழக்கில் டக்ளஸ் தோல்வி

தனக்கு மானம் இருந்ததாகவும் அதில் உதயன் பத்திரிகை இழப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிவித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த 4 வழக்குகளில் ஒன்றில் நேற்று அவர் தோல்வியடைந்தா
ர்.
இணையத் தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் அவர் யாழ். மாவட்ட நீதிமன்றில் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். தனக்கிருந்ததாக அவர் கூறும் மானத்தை இழக்கச் செய்ததற்கு இழப்பீடாக 500 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தார்.
2012ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு 5 வருடங்களாக நடந்து வந்தது. நேற்றைய தினம் வழக்கின் வலுவற்ற தன்மைகளைச் சுட்டிக்காட்டிய யாழ். மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 உதயன் சார்பில் அரச தலைவர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கே.வி.எஸ். கணேசராசா, சாறா ஜோர்ஜ் ஆகியோர் வழக்கை நடத்தினர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் சட்டத்தரணி ரெங்கன் முன்னிலையானார்