செவ்வாய், மே 23, 2017

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா


இயக்குநர் பேரரசு எழுதிய, என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  விழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய பாரதிராஜா, தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம்.  ஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா? இதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும்.  இதற்கான முயற்சியில் தமிழக இளைஞர்கள் இப்போதே ஈடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’’என்று தெரிவித்தார்.