புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

வெள்ளி, மே 26, 2017

அடமான சொத்துகளை விற்க ராதிகா சரத்குமாருக்கு ஐகோர்ட் தடை!

2.50 கோடி ரூபாய் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகா சரத்குமாருக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் , நடிகர் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் " இது என்ன மாயம்". இந்த படம் தயாரிப்புக்காக  ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த பணத்தை 2015 மார்ச் மாதத்திற்குள் திருப்பி தருவதாக உறுதி அளித்திருந்தனர். பணத்தை கொடுக்காத பட்சத்தில் படத்தின் தொலைக்காட்சி உரிமை, அல்லது அடுத்து எடுக்கக்கூடிய படத்தின் உரிமையை தருவதாகவும் உத்திரவாதம் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராயநகர் மற்றும் திருநெல்வேலியில் உள்ள சொத்துக்களை அடமானமாக கொடுத்திருந்தனர். ஆனால் உத்திரவாதத்தை மீறி பாம்பு சட்டை படத்தை வெளியிட்டுள்ளதால் தங்களுக்கு தர வேண்டிய இரண்டரை  கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து தர உத்தரவிட கோரியும் அடமானமாக வைத்த சொத்துக்களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்திருந்தது.

இந்த வழக்கை  நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. ராதிகா அடமானம் வைத்த சொத்துக்களை விற்க தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக  ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.