புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மே 27, 2017

மென்­பா­னத்­திற்­குள் சிலந்தி மறுக்­கி­றது உற்­பத்தி நிறு­வ­னம்

மென்­பா­னத்­திற்­குள் சிலந்தி இருந்­த­த◌ா­கத் தமது நிறு­வ­னத்­தின் தயா­ரிப்­புக்கு எதி­ரா­கச் செய்­யப்­பட்ட முறைப்­பாடு திட்­ட­மி­டப்­பட்ட ஒரு செயற்­பாடு என்று நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார். 

கடை­யில் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட மென்­பா­னத்­துக்­குள் சிலந்தி இருந்­தது என்று தெரி­வித்து பாவ­னை­யா­ளர் அதி­கார சபை­யி­டம் பாவ­னை­யா­ளர் ஒரு­வ­ரால் முறை­யி­டப்­பட்­டது. அந்த மென்­பா­னத்தை உற்­பத்தி செய்­யும் சிறுப்­பிட்­டி­யில் உள்ள நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் அது தொடர்­பில் விளக்­க­ம­ளித்­துள்­ளார். அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது,

சிறுப்­பிட்­டித் தொழிற்­சா­லை­யில் உற்­பத்தி செய்­யப்­ப­டும் மென்­பா­னம் உரிய சுகா­தார மற்­றும் சரி­யான உற்­பத்­திப் படி­மு­றை­க­ளு­டா­கவே தயா­ரிக்­கப்­பட்டுச் சந்­தைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.
 
இவ்­வா­றான படி­மு­றை­க­ளுக்கு ஊடாக உற்­பத்தி செய்­யப்­ப­டும் மென்­பா­னத்­திற்­குள் பிற பொருள்­கள் உள்­நு­ழை­வ­தற்­குச் சாத்­தி­யம் இல்லை.

ஒழுங்கு முறை­யான உற்­பத்­திப் படி­மு­றை­க­ளைக் கொண்ட உற்­பத்­திக்­குள் சிலந்தி உட்­பு­குத்­தப்­பட்­டது என்­பது திட்­ட­மிட்ட முறை­யில் உள்ளூர் உற்­பத்­திப் பொருட்­க­ளின் வளர்ச்­சியை மழுங்­க­டிக்­கும் செய­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது -என்றார்.