புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

திங்கள், மே 22, 2017

வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கப்படுத்துங்கள் - முதலமைச்சர் விக்கியிடம் சத்தியலிங்கம் கோரிக்கை


வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடி விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கப்படுத்துங்கள் - முதலமைச்சர் விக்கியிடம் சத்தியலிங்கம் கோரிக்கை
வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான மோசடி, ஊழல் குற்­றச்­சாட் டுக்­கள் பற்­றிய அறிக்­கையை முத­ ல­மைச்­சர் மாகாண சபைக்­கும் மக்­க­ளுக்­கும் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாணச் சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண அமைச்­சர்­க­ளில் நால்­வர் மீது முன்­வைக்­கப் பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை இடம்­பெற்று அதன் அறிக்கை முத­ல­மைச்­சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

விசாரணைக்கான தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. அதனால் முதலமைச்சரினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. நான் உட்பட நான்கு அமைச்சர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. விசாரணைக் குழு அழைத்ததால் அந்தக் குழு முன்பாகத் தோன்றி விளக்கம் அளித்தோம்.

குறித்த விசாரணையில் என்ன நடந்தது என்று அறிய மக்கள் ஆவலாகவுள்ளனர். அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைதானா என்று அனைவரும் அறியவேண்டும். எனவே முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

விசாரணை அறிக்கை முதலமைச்சரின் கையில் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னரே பகிரங்கப்படுத்தப்படவேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்னரே மின்னஞ்சல் மூலமாகக் கோரியிருந்தேன்-என்றார்.