ஞாயிறு, மே 28, 2017

முன்னாள் எம்.பி விநாயகமூர்த்தி உயிரிழப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, கொழும்பு அப்பலோ மருத்துவமனையில் சற்று முன்னர் உயிரிழந்தார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதிக் கிரியைகள், கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.