தமிழர்கள் தனிநாடு கேட்க நியாயம் உண்டு, சந்திரிக்கா-பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன்காலமானார்-சிவசக்தி ஆனந்தனுக்கு ஏதோ பிரச்சினை சரவணபவன் தெரிவிப்பு-மோடியும் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி அலைன் பெர்செட்டும் சந்திப்பு-சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு – ஆவணங்களுடன் தயாராகிறது ஐதேக 70

வியாழன், மே 25, 2017

ஞானசார தேரரைப் பிடிக்க தேடுதல்! - வெளிநாடு செல்வும் தடை

பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இ​டையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்காக அவரை கைது செய்வதற்கான பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் அவரை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புதுக்கடை நீதிமன்றத்தின் 4ம் இலக்க நீதிபதியினால் அவருக்கு வௌிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞானசார தேரருக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவதற்கு திட்டமிடப்பட்ட குற்றப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைத்திருந்த போதிலும் அவர் ஆஜராகவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.