புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

செவ்வாய், மே 23, 2017

ஜேம்ஸ் பொண்ட் காலமானார்


'ஜேம்ஸ் பொண்ட் 007' தொடரில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சேர் ரோஜர் மூர், தனது 89ஆவது வயதில் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (23) உயிரிழந்துள்ளார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூர், 1973ஆண்டுக்கும் 1985ஆம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/popularity/ஜேம்ஸ்-பொண்ட்-காலமானார்/97-197195

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!


Roger Moore

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகரான ரோஜர் மூர் காலமானார். அவருக்கு வயது 89. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று ஸ்விட்சர்லாந்தில் காலமானார். மூரின் இறப்பு செய்தியை, அவரது குடும்பம் உறுதி செய்துள்ளது.

கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை அவர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து உலகப் புகழ் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் அவர் 7 திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டாக தோன்றி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

அவரது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில், 'மூர் புற்றுநோய் வந்த பிறகு குறைந்த காலமே உயிரோடு இருந்தாலும், அந்நேரத்தில் அவர் மிகவும் தைரியமாக நோயை எதிர்கொண்டார்' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது குழந்தைகள், 'அப்பா, நீங்கள் நீங்களாகவே இருந்தமைக்கு நன்றி. நீங்கள் பலருக்கு மிக முக்கியமானவராக இருந்துள்ளீர்கள்' என்று உருக்கமாக தெரிவித்துள்ளனர்.