புதன், மே 24, 2017

காணாமல் போன சிப்பாயின் உடலைக் கண்டுபிடிக்க விஸ்வமடுவில் அகழ்வு!

வறக்காபொல பகுதியைச்சேர்ந்த நிமல் சேனாரத்ன என்பவர் 2009 ஆண்டு பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணி புரிந்துள்ளார். குறித்த நபர் 2010 ம் ஆண்டு இரண்டாம் மாதம் முதல் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் நீதிமன்றின் அனுமதியுடன் நீதிபதி எம்.எஸ்.எம் சம்சுதீனின் முன்னிலையிலையே நேற்று விஸ்வமடுவில் அகழ்வுப்பணி நடைபெற்றது. குறித்த நபர் 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் மீண்டும் பணிக்கு திரும்பவில்லை எனவும் இராணுவத்தரப்பு தெரிவிக்கின்ற நிலையில் குறித்த நபரை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலையே குறித்த அகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த அகழ்வு நடவடிக்கை நான்காவது தடவையாக நேற்று நடைபெற்ற போதும் தடயங்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.