புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

புதன், மே 31, 2017

இரட்டை இலைச் சின்னத்துக்காக இரு அணியினரும் போட்டிபோட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில், சசிகலா அணியின் சார்பில் 70,000 பக்கங்கள்கொண்ட பிரமாணப் பத்திரம், தேர்தல் ஆணையத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க அணி இரண்டாகப் பிரிந்தது. சசிகலா தலைமையில் ஒரு அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் உருவானது. இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியதை அடுத்து, தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு, தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. இரு அணியினரும் மாறி மாறி இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 20 லட்சம் பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல்செய்யப்பட்டது. இந்த நிலையில், சசிகலா அணியின் சார்பில், அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்தார். அந்தப் பிரமாணப் பத்திரம் 70,000 பக்கங்களைக்கொண்டது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், 'இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் அணியின் விருப்பம். தொண்டர்களின் விருப்பமும் அதுதான்.இந்த அரசு, ஜெயலலிதாவின் அரசாகவே தொடரும். தமிழக அரசு யாருக்கும் பயப்படாது. இரு அணிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தால், தேர்தல் ஆணையத்தில் உள்ள வழக்கு திரும்பப் பெறப்படும். ஜல்லிக்கட்டு விவகாரத்தைப்போல மாட்டிறைச்சி விவகாரத்தையும் சுமுகமாகக் கையாள்வோம்' என்றார்.