புங்குடுதீவு ஆலயங்களில் ஏப்ரல் மாத விழாக்கள் ,,,12.மடத்துவெளி வயலூர் முருகன் தேர்,,14.இறுபிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் தேர் ,,20.மடத்துவெளி நுழைவாயில் பிள்ளையார் கும்பாபிஷேகம் ,,28.கண்ணகி அம்மன் தேர்,,14சிவலைபிட்டி சனசமூக நிலைய விளையாட்டு விழா 70

சனி, மே 27, 2017

வடக்கு கிழக்கிலும் சூறைக்காற்று வீசும்! - வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை


லங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எ
ச்சரிக்கை விடுத்துள்ளதுயாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் இதுகுறித்து கூறுகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதியில் காற்றின்வேகம் மணிக்கு சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம். தரையில் சுமார் 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை இருக்கலாம். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.